ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
பேராசிரியர் அ. கருணானந்தம்
மேலும், தற்போதைய இந்து மதம் என்ற சொல்லாடலுடன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்த மதத்தை இணைத்துப் பார்ப்பது தேவையற்றது; அது ஒரு வரலாற்று பிழை என்கிறார் அவர்.
''வடமேற்கு திசையில் இருந்து இந்தியவுக்கு வந்த பாரசீகர்களும் கிரேக்கர்களும் இந்திய நாட்டை அப்போது சிந்து என்று வழங்கினார்கள்.
அந்த பெயர் சிந்து நதி பகுதியில் வசிப்பவர்கள் என்ற அர்த்தத்துடன் வழங்கப்பட்டது. காலப்போக்கில் சிந்து என்பது, ஹிந்து, இந்து என்று மருவிவிட்டது.
சிந்து என்றால் நதி என்று அர்த்தம், ஆனால் இந்து என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. காலப்போக்கில் அரசியல்வாதிகள் இந்து என்பதை மதத்தை குறிக்கும் சொல்லாக மாற்றிவிட்டார்கள்'' என்கிறார் கருணானந்தம்.
ராஜ ராஜ சோழன் காலத்தில் சிவன் கோவில்களில் பின்பற்றப்பட்ட மதம் சைவ மதம்தான் என்கிறார் 'இராஜராஜம்' என்ற நூலை எழுதியுள்ள வெ. ஜீவகுமார்.
''ராஜ ராஜனின் காலத்தில் சிவன் கோயில்களில் பின்பற்றப்பட்ட மதத்தை சைவம் என்றுதான் வழங்கினார்கள்.
தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களில் சைவம் என்ற சொல்தான் வழங்கப்படுகிறது. இன்றும்கூட சைவத்தை தனி மதமாக கருதுபவர்கள் இருக்கிறார்கள்.
சிவலிங்கத்தை மட்டும் வழிபடும் லிங்காயத்துகள் கூட தாங்கள் இந்துக்கள் அல்ல என்றுதான் கூறுகிறார்கள்.
சைவத்தை போலவே, ராஜ ராஜனின் காலத்தில் சமணமும் பௌத்தமும் பின்பற்றப்பட்டது. வைணவமும் பின்பற்றப்பட்டது.
கடவுளை வணங்காமல் வாழ்ந்த சித்தர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். தான் சைவத்தை பின்பற்றினாலும், ராஜ ராஜனின் ஆட்சியில் பல மதங்களும் இருந்ததால் ஒரு மதத்தின் மன்னனாக ராஜ ராஜன் அறியப்படவில்லை" என்கிறார் ஜீவகுமார்.
''இந்து என்ற சொல்லுக்கு தனியாக ஒரு வழிபாட்டு முறையோ கடவுளோ கிடையாது. இந்து என்று சொல்லில் குறிப்பிடுவது வேத காலத்து வழிபாட்டைத்தான். அதாவது வேள்வி நடத்தி வழிபாடு செய்வது. அது சனாதன தர்மத்தை, வர்ணாசிரமத்தை ஆதரிப்பது. அ தற்கு முற்றிலும் மாறுபட்டதாகத்தான் தமிழர்கள் பின்பற்றிய மத வழிபாடுகள் இருந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் கூட ஆறு மதங்களைக் குறிக்க ஷன்மதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். அதாவது, சிவனை வழிபடுவது சைவம், விஷ்ணுவை வழிபடுவது வைணவம், முருகனை வழிபடுவது கௌமாரம், சூரியனை வழிபடுவது சௌரம், கணபதியை வழிபடுவது காணாபதியம், சக்தியை வழிபடுவது சாக்தம் என்று வகைப்படுத்தியுள்ளார். அதனால், தற்போதைய சொல்லாடலை வைத்துக்கொண்டு ராஜராஜ சோழனை இந்து மன்னன் என்று சொல்வது பிழை" என்கிறார் சரவணன். மேலும், சைவம் என்ற மதமே இந்து என்ற சொல்லில் மறைக்கப்பட்டது என்கிறார் சரவணன். ''திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான நூல்களில்கூட இந்து என்ற குறிப்புகள் வரவில்லை. அதனால், பிற்காலத்தில் அரசுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், வேத பிராமணர்கள் உயர்வானவர்கள் என்ற கோட்பாட்டை ஏற்படுத்தினர். பிறகு ஒரு கட்டத்தில், சைவ மதத்தின் முழு முதற் கடவுளான சிவனை பல இந்து கடவுள்களில் ஒருவராக இணைத்தனர். இப்படித்தான் சைவ மதத்தை இந்து என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து அதனை விழுங்கினர். பின்னர் வைணவத்திற்கும் அதுதான் நேர்ந்தது. சைவத்தை முழுமையாக பின்பற்றுபவர்கள் தாங்கள் இந்துக்கள் என்று தற்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்கிறார் சரவணன். ''ஹிந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் இந்துக்கள்'' ஆனால், வெற்றிமாறனின் கருத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. "சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச்சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும் https://t.co/Nd505iHrZk
— H Raja (@HRajaBJP) October 2, 2022
இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை என்பதால், அந்தச் சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறார் தமிழக பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி. ''இந்தியா என்கிற ஹிந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள்தான் என்றே நாம் சொல்கிறோம். சைவமும், வைணவமும் மோதிக்கொண்டதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து, இணைத்தது இந்து என்ற சொல்தானே? குருதிச் சேற்றில் தலைகள் உருண்டதாகவே வைத்து கொள்வோம். அதை தடுத்து, சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல்தானே? அதனால், இந்து என்ற சொல்லை வழங்குவதில் தவறில்லை,'' என்கிறார் நாராயணன் திருப்பதி.சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும் https://t.co/Nd505iHrZk
— H Raja (@HRajaBJP) October 2, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!