இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு
27 Oct, 2026
இந்த நிலையில், இன்று காலை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரில் சரமாரியாகத் தாக்குலைத் தொடங்கின.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 30 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.
குறிப்பாக, ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி கமேனியின் வீடு மற்றும் அலுவலகம், உளவுத்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அங்கு பதற்றம் நீடித்து வருவதால் அலி கமேனி சுரங்கத்தில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வளைகுடா முழுவதும் உள்ள பல அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளன.
அவற்றில் அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா விமானத் தளம், பஹ்ரைனின் ஜுஃபைர் பகுதியில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படையின் சேவை மையம், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளம் மற்றும் குவைத்தில் உள்ள அல் சேலம் விமானத் தளம் ஆகியவை அடங்கும். தவிர, இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்களையும் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!