கணவர் வீட்டிற்கு 18 கிலோமீட்டர் (மணி3 மணி) நேரம் நடந்தே சென்ற மணப்பெண்
27 Oct, 2026
தற்கொலை செய்து கொண்ட சசிகலா
இந்நிலையில் கடந்த மாதம் பாண்டியுடன் சசிகலா வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். இது குறித்து சசிகலாவின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து பாண்டியுடன் வசித்து வந்த சசிகலாவை மீட்ட போலீஸார் சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னரும் பாண்டியுடன் சேர்ந்து வாழ முடியாத சோகத்தில் மனமுடைந்து இருந்து வந்துள்ளார் சசிகலா. இதனால் கடந்த சனிக்கிழமை சசிகலா தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட காதலன் பாண்டி
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கிருஷ்ணகிரிக்கு கார் ஓட்டிச் சென்றிருந்த பாண்டி, சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தச் சோகத்தில் இருந்து மீள முடியாத பாண்டி கிருஷ்ணகிரியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்பத்தினரின் எதிர்ப்பினால் நிறைவேறாமல் போன காதலால் இரு உயிர்கள் பலியான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!