news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரிசாத்திற்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணை

19 Oct, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணை செய்துவருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசார ஜயரட்ண இதனை தெரிவித்துள்ளார். பத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணை செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவே பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரை சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.   ரிஷாத்துக்கு எதிர்வரும் 27 வரை விளக்கமறியல் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அதேபோல் ரிஷாத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான மருத்துவர் உட்பட ஏழு பேருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!