இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
சேடிஸம் பிரச்னை சிலருக்கு செக்ஸிலும் இருக்கும்!
''இந்தப் பிரச்னையை பொதுவாக 'மேரிட்டல் ரேப்' என்று மட்டுமே கடந்துவிட முடியாது. சிலரிடம், 'சேடோமசோசிஸ்டிஸ்க்' (Sadomasochistic behavior) என்கிற பிரச்னையும் இருக்கலாம். இதுபற்றி விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சேடிஸ்ட் என்று சொல்வோம் இல்லியா? அதாவது, மற்றவர்களை துன்புறுத்துவதில் இன்பம் காண்பவர்கள்.
இந்த சேடிஸம் பிரச்னை சிலருக்கு செக்ஸிலும் இருக்கும். மனைவியின் கையை, காலை கட்டிப்போட்டுவிட்டு, அடித்தபடி செக்ஸ் செய்வார்கள்.
இப்படி செய்தால்தான் அவர்களுக்கு செக்ஸில் உச்சக்கட்டம் கிடைக்கும். 'Sadomasochistic behavior'-ல் அடிப்பதில் இன்பம் காண்பவர்கள் 'சேடிஸ்ட்.' அடிவாங்குவதன் மூலம் உச்சக்கட்டம் அடைபவர்கள் மசோசிஸ்டிஸ்க் (masochistic). இந்தப் பிரச்னையில் பெண்ணும் சேடிஸ்ட்டாக இருக்கலாம்.
ஆணும் அடிவாங்குவதில் இன்பம் அடைகிற மசோசிஸ்டிஸ்க் (masochistic)-ஆக இருக்கலாம். இந்த இரண்டுமே பாலியல் பிறழ்வுகள்.
அடிப்பதையும், அடி வாங்குவதையும் செக்ஸில் நார்மலான விஷயம் என்று...
இந்த இயல்பு இருக்கிற கணவனுக்கு, அடிவாங்குவதில் இன்பம் காண்கிற மனைவி அமைந்தால், இந்த விஷயம் பிரச்னையாக வெளியே வராது.
ஏனென்றால், சேடிஸ்ட்டும் மசோசிஸ்டிஸ்க்கும் அடிப்பதையும், அடி வாங்குவதையும் செக்ஸில் நார்மலான விஷயம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள். ஆனால், செக்ஸில் ஒரு சேடிஸ்ட்டும் நார்மலும் இணையும்போது, நார்மலான நபரின் வாழ்க்கை பெரும் சிக்கலாகி விடும்.
சேடிஸ்ட்
தன்னுடைய தற்கொலை முடிவை சொல்வார்கள்!
பொதுவாக, செக்ஸில் நார்மலான ஒரு பெண்ணால் செக்ஸில் சேடிஸ்ட் கணவரை எதிர்கொள்ள முடியாமல் டிப்ரஷனுக்குள் விழுந்துவிடுவார்கள்.
இது நடந்தால், அறிவின் செயல்பாடுகள் குறைந்துவிடும். அப்போது, தன்னை மாய்த்துக்கொண்டால்தான் இதிலிருந்து வெளியே வர முடியும் என்கிற முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
இவர்கள், தங்களுடைய தற்கொலை முடிவை நெருங்கிய வட்டத்தில் சொல்வார்கள். அந்த நேரத்தில் எச்சரிக்கையாகி விட்டால், ஓர் உயிரை காப்பாற்றிவிடலாம்.
துணையை உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக துன்புறுத்தினால்...
இன்னமும் நம் மக்களுக்கு செக்ஸுவல் உரிமை தொடர்பான விழிப்புணர்வு இல்லை. கணவரோ/மனைவியோ சம்மதம் கொடுத்தால் மட்டுமே அவர்களைத் தொட வேண்டும்.
செக்ஸில், துணைக்கு விருப்பமில்லாததை செய்யவோ, செய்யும்படியோ கட்டாயப்படுத்தக்கூடாது.
கணவரோ, மனைவியோ தன் துணையை உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக துன்புறுத்தினால் அது கிரிமினல் குற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்'' என்றவர், சேடிஸ்ட் ஆண்களை திருமணத்துக்கு முன்னால் எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் விளக்கினார்.
இந்த விஷயத்தில் காதல் கண்ணை மறைக்கவே கூடாது. அப்படி மறைத்தால், போர்னோகிராபி பார்ப்பவனையும், போதைப்பழக்கம் இருப்பவனையும்கூட திருமணத்துக்குப் பிறகு தன் அன்பால் திருத்திவிடுவேன் என பெண்கள் முடிவெடுத்து விடுவார்கள். ஒருதிருமணத்தில் இதைவிட தவறான முடிவு இருந்துவிட முடியாது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!