இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
போரிஸ் ஜான்சன்
அவர் அந்த விசாரணையை எதிர்கொள்ளாமல் இருந்திருந்தால், அவர் மீண்டும் பிரதமர் ஆவதற்கான வழி கிடைத்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால் அவருக்குக் கிடைக்கவில்லை.
அவருடைய ஆதரவு போதுமான அளவுக்கு இல்லாததால், அவர் இன்று போட்டியில் இல்லை. நாடாளுமன்ற கட்சியில் மூன்றில் ஒரு பகுதியினரையே தனக்கு ஆதரவளிக்குமாறு அவர் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
வெற்றி கூட அச்சுற்றுத்தும் மற்றும் பேரழிவு தரக்கூடியதாக இருந்திருக்கும் என்பதே அதன் பொருள். நாடாளுமன்ற கட்சியின் ஆதரவின்றி ஆட்சி செய்ய முயல்வது எப்படியிருக்கும் என்று அவருக்குத் தெரியும். அது நல்லபடியாக இருக்காது.
ஆகவே, பிரதமர் மீண்டும் மாறுகிறார்.
அது ரிஷி சூனக் என்றால், போட்டி எதுவும் இல்லையென்றால், திங்கள்கிழமை மாலை அரசர் லண்டனில் இருப்பார் என்று நான் கேள்விப்படுகிறேன்.
ஒருவேளை அரசர் தலைநகரில் அந்த நேரத்தில் இல்லாவிட்டால், சூனக் இன்று மதியம் வெற்றியாளராக உறுதி செய்யப்பட்டால், அவர் பிரதமர் ஆவதற்கு செவ்வாய்க்கிழமை வரை காத்திருப்பார். பார்க்கலாம், ஒருவேளை இன்னமும் ஒரு போட்டி இருக்கலாம்.
உண்மையில் முக்கியமானது என்னவெனில், வெற்றியாளர் யாராக இருந்தாலும் லிஸ் டிரஸால் தாங்க முடியாத அளவுக்கு இருந்த கடுமையான பிரச்னைகள் அவர்கள் கைகளுக்குச் செல்லும். ஆழமாகப் பிளவுபட்ட கட்சி, உயரும் விலைவாசி, மோசமான பொது நிதி, இது முறையான தேர்தல் இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், பழைமைவாத கட்சியின் கிளர்ச்சிக்கான தீராத பசி இறுதியாகத் தணிந்துவிடும் என்று அவர்கள் நம்புவார்கள். அப்படி இல்லையென்றால், ஒரு கடினமான வேலை விரைவில் சாத்தியமற்றதாகிவிடும்.
யார் இந்த ரிஷி சூனக்?
ரிஷி சூனக் தனது இணையதளத்தில், "நான் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் நிறைய தியாகங்கள் செய்தார்கள். வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சூனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை பெங்களூரில் 2009இல் திருமணம் செய்துகொண்டார்.
இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அவரது அறிவிக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை அவரது மனைவிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
ரிஷி சூனக் சுயமாக முன்னேறியவர். அவர் தனது இணையதளத்தில், "வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெங்களூர் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினேன். அது பலன் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சனை முதுகில் குத்தியதற்காக ரிஷி சூனக் மீது கட்சியினர் பலர் கோபமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிஷி சூனக் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் பல அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு வெளியேறினர், அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
இதற்குப் பிறகு, புதிய பிரதமருக்கான முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். கடைசி சுற்றுக்கு முன், கட்சி எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், கட்சி உறுப்பினர்களுக்கு அந்த உரிமை இல்லை. எம்.பி.க்கள் ரிஷி சூனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோரை கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்தனர்.
கடைசிச் சுற்றில் எம்.பி.க்கள் அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ரிஷியின் அரசியல் வாழ்க்கையை முன்னேற்ற போரிஸ் ஜான்சன் பெரிதும் உதவியதாக மக்கள் கூறுகின்றனர். ரிஷி சூனக் மீது அவர் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரிஷி செய்தியாளர்களிடம், போரிஸ் ஜான்சனை அணுகுவதற்குத் தாம் பல முறை முயன்றும் அவை செவிசாய்க்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டார்.
கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் ரிஷி சூனக் சூனக்கின் புகழ் லிஸ் டிரஸ்ஸுடன் ஒப்பிடும்போது மிகவும் வலுவாக உண
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!