news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ரூ. 1,000க்கு மேல் காஸ் விலை குறைப்பு

04 Apr, 2023
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3728 ஆகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.402 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 1,502 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 700 ஆகும். இந்த விலை குறைப்பு மாற்றங்கள் அனைத்தும் இன்று இரவு முதல் அமுலாகும். நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் லிட்ரோவின் முயற்சிகளையடுத்து இந்த விலை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!