நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மீட்பு!
03 Nov, 2026
அது தவிர, மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம், வாகனம், உத்தியோகபூர்வ இல்லம் ஆகியன எனக்கும் கிடைக்கின்றது. இதற்கு முன்னர் இருந்த மத்திய வங்கி ஆளுநர் (அஜித் நிவாட் கப்ரால்) இப்பதவிக்கு வரும்போது ரூ. 150,000 ஆக இருந்த சம்பளத்தை ரூ. 4 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். அமைச்சரவை அந்தஸ்துக்கு சமனான அந்தஸ்தையும் உயர்த்திய அவர், வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து தனக்கான தனிப்பட்ட ஊழியர் குழாமையும் உருவாக்கிக் கொண்டார். இக்குழாம் ஊடகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நபர்களைக் கொண்டதாக இருந்தது. அமைச்சரவை அமைச்சருக்கும் இல்லாத பாதுகாப்பையும் அவர் பெற்றிருந்தார். STF உள்ளிட்டோர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இதில் உள்ளடங்கியிருந்தனர். இவ்வாறான எந்தவொரு பாதுகாப்பையும் நான் பெறவுமில்லை, பெறப்போவதுமில்லை. அந்த சலுகைப் பொதியுடன் ஒப்பிட்டு பார்க்கப் போனால் எனக்கு தற்போது கிடைப்பது, வழக்கமாக மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைக்கும் ரூ. 4 இலட்சம் சம்பளம், உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனம் ஆகியனவே. எனவே, ரூ. 25 இலட்சம் சம்பளம் என்பதும், IMF ஓய்வூதியம் என்பதும் பொய்யான கருத்துகளே. அந்த வகையில், எனக்கு முன்னர் இருந்த ஆளுநருக்கு கிடைத்த வசதிகளிலும் குறைவான வசதிகளே எனக்கு கிடைப்பதோடு, அவருக்கு வழங்கிய பாதுகாப்பு எனக்கு உண்மையில் அவசியமுமில்லை. முந்தைய ஆளுநருக்கு பொருளாதாரத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் போதிய தெளிவு இருந்ததா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தனது பாதுகாப்பு தொடர்பில் போதிய தெளிவு இருந்துள்ளது. அத்துடன் இதற்கு முன்பு இருந்த ஆளுநர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளையில், அவருக்கு முன்பு இருந்த ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இதுவரை மத்திய வங்கி ஆளுநருக்கு இல்லாத ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அந்த வகையில் இதற்கு முன்பிருந்த இரு ஆளுநர்களும் ஒரு மாதம் பணியாற்றியிருந்தாலும் அவர்களது சம்பளத்திற்கு ஏற்ற வகையில் ஓய்வூதிய வழங்கப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஓய்வூதியத்தை பெற நான் தயாரில்லை. அரசாங்க சட்டத்திற்கு அமைய, வழக்கமான ஓய்வூதிய திட்டத்தை பெற அரச ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் அரச சேவையில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் நான் மத்திய வங்கி ஆளுநராக குறுகிய காலத்திற்கே பணியாற்றவுள்ளேன். குறுகிய காலத்திற்கு இவ்வாறு பணியாற்றி அவ்வாறானதொரு ஓய்வூதியத்தை பெறமாட்டேன் என நான் கொள்கை ரீதியான முடிவைக் கொண்டுள்ளேன். அவ்வாறு கிடைத்தாலும் நான் அதனை நிராகரிப்பேன் என நம்பிக்கையுடனும் உறுதியாகவும் கூறுகின்றேன்.Ajith Nivard Cabral was took steps to increase the salary of the Central Bank Governor from Rs. 150,000 to Rs. 400,000 - CBSL Governor Nandalal Weerasinghe#SriLanka #LKA #SL pic.twitter.com/zmfamDBuz9
— Rizwan Segu Mohideen (@RizwanStWEET) November 24, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!