செல்வராணியும் கஸ்டமர் கேர் என்ற பெயரில் பேசிய மோசடி கும்பலைச் சேர்ந்தவரும் பேசிய செல்போன் உரையாடலையும் வங்கி விவரங்களையும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், `ஹலோ சார்' என்று செல்வராணி பேசுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசுபவர் `சொல்லுங்க மேடம்' என்று சொல்கிறார்.
உடனே செல்வராணி, `550 ரூபாய் பணத்தை திரும்பத் தர வேண்டும்' என்று கேட்கிறார். அதற்கு கஸ்டமர் கேரில் பேசும் நபர், `நீங்கள் அப்ளிகேசனை டவுன்லோடு செய்யுங்கள்' என்று பதிலளிக்கிறார்.
உடனே செல்வராணி, `இனிமேலும் நான் ஏமாற மாட்டேன். என்னுடைய பணத்தை திரும்பத் தந்தால் போதும்' என்று சொல்கிறார்.
அதற்கு கஸ்டமர் கேர் ஊழியர், `5 நிமிடத்தில் பணம் வந்துவிடும்' என்று சொல்கிறார். ஆத்திரமடைந்த செல்வராணி, `நீ எல்லாத்தையும் எடுத்துவிட்டு ஓடிப்போய்விடணும்ன்னு இருக்க' என்று தமிழில் கூறுகிறார்.
உடனே `என்ன மேடம் சொல்லுறீங்க'என்று கஸ்டமர் கேர் ஊழியர் கேட்பதோடு ஆடியோ முடிவடைகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!