சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
திருப்பமான மோதல்: 1986 ஏப்ரல் மாதம் புலிகள் இயக்கத்திற்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் போராளி இயக்கங்களின் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.
அதுவரை எங்காவது ஒரு பகுதியில் நடைபெறும் மோதலோடு பூர்த்தியான இயக்க மோதல்கள் முதன் முதலாக முழு மோதலாக வெடித்தது அப்போது தான். புலிகள் இயக்கத்தின் கோப்பாய் பகுதி பொறுப்பாளர் லிங்கம். அவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்தவர். தமது இயக்க சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த லிங்கத்தோடு ரெலோ இயக்க உறுப்பினர்கள் சிலருக்கு பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை முற்றியதால் ரெலோ உறுப்பினர்கள் துப்பாக்கிமுனையில் லிங்கத்தை தமது வாகனத்தில் கடத்திச் சென்றார்கள். சிறீசபாரெத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார் லிங்கம். அங்குவைத்து லிஙகத்தை விசாரிக்க முற்பட்டனர் ரெலோ இயக்கத்தினர்.லிங்கம் ஒத்துழைக்கவில்லை. அதேநேரம் லிங்கம் கடத்திச் செல்லப்பட்ட விடயத்தை அறிந்த புலிகள் ரெலோவோடு தொடர்பு கொண்டனர்.
லிங்கம் தப்பியோட முற்பட்டபோது நம்மவர்கள் சுடவேண்டியேற்பட்டது. அதனால் லிங்கம் இறந்துவிட்டார். என்று பதில் சொல்லப்பட்டது. உடனடியாக செயலில் இறங்கினார்கள் புலிகள். ரெலோ இயக்க முகாம் ஒன்றுக்குள் புகுந்து பதிலடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு ஒரு குழுவை அனுப்பி வைத்தார் கிட்டு. யாழ்ப்பாணம் பழைய பூங்காவீதியில் ரெலோ முகாம் ஒன்று இருந்தது. ஏனைய முகாம்களைவிட அதனைத் தாக்குவதுதான் சுலபமாக இருக்கும் என்று கிட்டு திட்டம் போட்டார். ரெலோ முகாம் ஒன்றை தாக்கிவிட்டு பின்னர் ரெலோவோடு பேச்சுக்குச் செல்லலாம் என்பதுதான் கிட்டுவின் திட்டம். தாக்குதல் ஆரம்பம் திட்டப்படி பழைய பூங்காவீதி முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. ரெலோ உறுப்பினர்கள் பதிலடியில் ஈடுபடவில்லை. அதற்கு தயாராகவும் இருக்கவில்லை. லிங்கம் கடத்தப்பட்ட விவகாரமும் அங்கிருந்தவர்களுக்குத் தெரியாது. முகாமிலிருந்த சிலர் கொல்லப்பட்டனர். முகாம் பொறுப்பாளர் உட்பட பலர் தப்பிச் சென்றனர். அந்த முகாமின் பொறுப்பாளரது மருமகன் ஒருவர் புலிகளிடம் சிக்கிவிட்டார். அவரது வயது 13. முதல்நாள்தான் மட்டக்களப்பிலிருந்து இருந்து தனது மாமனாரைக் காண வந்திருந்தார். அவரையும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் என்று நினைத்துவிட்டார்கள் புலிகள். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்றான் சிறுவன். நம்பவில்லை. வேன் ஒன்றுக்குள் போட்டு பூட்டி வெடி குண்டை வைத்தனர் புலிகள். வேன் சிதறியது. சிறுவனின் காலில் ஒரு பகுதி மரத்தில் போய் தொங்கியது. பழைய பூங்காவீதி முகாமில் பதிலடி இருக்கவில்லை என்பதால் கிட்டு திட்டத்தை மாற்றிக் கொண்டார். ரெலோ முகாம்கள் அனைத்தையும் தாக்குமாறு சகல முகாம்களுக்கும் ‘வோக்கி’யில் உத்தரவு பிறப்பித்தார். திலீபன் தலைமையில் கல்வியங்காடு ரெலோ முகாம் நோக்கியும் ஒரு அணி சென்றது. இந்தக் காலகட்டத்திலேயே புலிகள் தொலைத்தொடர்பு சாதன விடயத்தில் முன்னணியில் இருந்தனர். அநேகமாக சகல முகாம்களிலும் வோக்கிடோக்கி இருந்தது. அதனால் உத்தரவுகளையும், உடனடித் தகவல்களையும் விரைவாகப் பரிமாற முடிந்தது. ஏனைய இயக்கங்களிடம் தலைமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வோக்கிடோக்கி இருந்தது. பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவந்துதான் கல்வியங்காடு ரெலோ முகாமுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது. அதற்கிடையே கல்வியங்காட்டுப் பகுதியில் புலிகளது வியூகம் வகுக்கப்பட்டு விட்டது. பழைய பூங்காவீதி முகாம் தாக்கப்பட்ட செய்தியை முதலிலேயே அறிந்திருந்தால் கல்வியங்காட்டில் பிரதான முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் முந்திக்கொண்டு பதிலடிக்கு தயாராகியிருப்பார்கள். ரெலோவின் பிரதான முகாமுக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஏனைய ரெலோ முகாம்களுக்கும் இடையே வானொலித் தொடர்பு இருந்திருந்தால் பிரதான முகாமை நோக்கி அவர்கள் அழைத்திருக்கலாம். வானொலி தொடர்பு சாதனங்களின் பெறுமதியை அன்றுதான் ரெலோ உணர்ந்திருக்கும். முதலிலேயே உணர்ந்திருந்தால் ரெலோவாலும் வாங்க முடிந்திருக்கும்.
டயரில் பேட்டடார்கள்.
தமது முகாம்கள் தாக்கப்படும் விடயமே தெரியாமல் வீதிவழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த ரெலோ உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.
ரெலோ வாகனம் ஒன்றை மறித்த புலிகள் “நீங்கள் எந்த இயக்கம்?” என்று கேட்டார்கள். புலிகள் தமது இயக்கத்திற்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.
“நாங்கள் ரெலோ…நீங்கள்?”
புலிகள் பதிலே சொல்லவில்லை.
கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத்தள்ளினார்கள். வேனில் இருந்தவர்கள் ஆறுபேரும் கொல்லப்பட்டார்கள்.
திருநெல்வேலிச் சந்தியில் மட்டும் முப்பதுக்கு மேற்பட்ட ரெலோ உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
கல்வியங்காடு பிரதான முகாமில் இருந்து மட்டும் ரெலோ பதில் தாக்குதலில் ஈடுபட்டது. அதனால் பிரதான முகாமை புலிகள் நெருங்கிச் செல்ல முடியவில்லை.
பிரதான முகாமுக்கு வெளியிலிருந்து ஆட்பலம் வந்து சேராமல் புலிகள் வியூகம் அமைத்துக் கொண்டனர்.
அதேவேளை திருநெல்வேலிச் சந்தியில் சூடுபட்டு விழுந்து கிடந்த ரெலோ உறுப்பினர்களது உடல்களை ஒன்று சேர்த்தனர்.
சகல உறுப்பினர்களது உடல்களையும் ஒரே இடத்தில் குவித்து, அவற்றின்மீது டயர்களை போட்டு கொளுத்தினார்கள். கிட்டு, திலீபன் ஆகியோரது உத்தரவுப்படியே உடல்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டன.
சொக்கப்பானை எரிவது போல திருநெல்வேலி சந்தியில் தீயெழுந்து அப்பகுதியை சுடுகாடு போல மாற்றியிருந்தது.
தமது ஜீன்ஸ்களை முழங்கால்வரை மடித்துவிட்டுக்கொண்டு எரியும் நெருப்பில் உடல்களை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.
திசை தெரியவில்லை
கல்வியங்காடு பிரதான முகாமைத்தவிர யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ரெலோ முகாம்களும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த முதலாவது நாளே வீழ்ச்சியடைந்தன.
ரெலோ உறுப்பினர்களில் முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்பேர்.
புலிகளால் ரெலோ முகாம்கள் தாக்கப்பட்டபோது தப்பியோடிய அவர்களுக்கு பாதைகள் தெரியவில்லை. யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது என்றும் விளங்கவில்லை. புலிகளிடம் மாட்டிக் கொண்டார்கள்.
முதல் நாளன்று அப்படி மாட்டியவர்களில் கிட்டத்தட்ட நூறுபேர் வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர்.
திருநெல்வேலி சந்தி தவிர இரு பாலைச் சந்திக்கு அருகாமையிலும் டயர்களில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன.
ரெலோ இயக்க முக்கியஸ்தர்கள் பலர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திடமும், ஈரோசிடமும் சென்று பாதுகாப்புக் கேட்டனர்.
கிட்டத்தட்ட நூறு ரெலோ உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களிலும், 50ற்கு மேற்பட்டவர்கள் ஈரோஸ் இயக்க முகாம்களிலும் முதல் நாளன்று அடைக்கலம் பெற்றனர்.
ரெலோ உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாம் என்று கிட்டு நேரில் சென்று டக்ளஸ் தேவானற்தாவிடம் கூறினார்.
புலிகள் விதித்த தடை
பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் கசப்புகள் ஏற்படலாம் என்றார் கிட்டு.
எனினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ உறுப்பினர்களுக்கு தொடர்ந்து புகலிடம் வழங்கியது. வெள்ளைக் கொடிகளை வீதிகளில் பறக்கவிட்டு சமாதானத்தை வலியுறுத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
மக்கள் எதிர்ப்பு
யாழ்ப்பாணம் நாவந்துறையில் இருந்த ரெலோ முகாமை தாக்குவதற்காகச் சென்ற புலிகள் இயக்கத்தினரை பொதுமக்கள் தடுத்தனர்.
பொதுமக்களுக்கும், புலிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் புலிகள். பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டனர்.
ஆத்திரமடைந்த மக்கள் புலிகள் சென்ற வாகனங்களில் இரண்டை கொளுத்தினார்கள்.
திரும்பிச்சென்ற புலிகள் மீண்டும் வந்து வாகனத்தைக் கொளுத்தியவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.
இறந்தவர்களது உயிர்களை உங்களால் திருப்பித்தரமுடியுமா? என்று கேட்டனர் கூடியிருந்த மக்கள்.
பிரச்சனையை வளர்க்காமல் புலிகளது அணி திரும்பிச் சென்றது.
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு அறிவித்தல் செய்யப்பட்டது.
ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று, “ரெலோ இயக்க உறுப்பினர்கள் எம்மிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும். ரெலோ இயக்கத்தினருக்கு புகலிடம் வழங்குவோர் துரோகிகளாகக் கருதப்படுவார்கள்.
இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழ போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ இயக்கத்தை தடை செய்திருக்கிறோம்.” என்று அறிவித்தார்கள் புலிகள்.
ஈ.ழப் போராட்ட வரலாற்றில் இயக்கமொன்றை பிறிதொரு இயக்கம் தடைசெய்துவிட்டதாக அறிவித்தது அதுதான் முதல் தடவை.
(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன்
எம்.ஐ.17 எங்கே வீழ்ந்தது? கிளம்பிய வதந்திகளும், கிடைத்துள்ள தகவல்களும்
எம்.ஐ.17 சிறப்புத்தகுதிகள்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!