news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லண்டனில் பொதுமக்களை கத்தியால் குத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை

02 Feb, 2020

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டிரெதாம் பகுதியில் மதியம் 2 மணி அளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை சரமாரியாக குத்தினார்.

லண்டனிலுள்ள ஸ்ட்ரியாத்தம் ஹை ரோடு எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர், ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலாளியால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களை விலகிச் செல்லும்படி கூறிவிட்டு அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அந்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் கூறினர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் தாக்கியதில் பலர் காயம் அடைந்தனர். நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, அந்த நபரிடம் கத்தி இருந்ததாகவும், போலீசார் மக்களை விலகும்படி கூறிவிட்டு 3 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 29–ந் தேதி உஸ்மான்கான் என்ற தண்டனை பெற்ற பயங்கரவாதி 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்ததும், அவரை போலீசார் சுட்டுக்கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

நிலைமை கட்டுக்குள் வரும்வரை இந்த பகுதிக்குள் நுழைவதை தவிர்க்குமாறு லண்டன் நகர காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

"ஸ்ட்ரியாத்தம் சாலையில் ஏதோ மிகப் பெரிய சம்பவம் நடக்கிறது. ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், சாலைகள் மூடப்பட்டுள்ளன" என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

" ஆயுதமேந்திய போலீசார் ஸ்ட்ரியாத்தம் சாலை முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பகுதி முழுவதும் தற்போது ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், பொது மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை" என்று சம்பவ இடத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் பௌல் கூறுகிறார்.

24205790-0-image-a-124_158065961313424205468-7958201-image-a-115_1580658705748

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!