news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கையா? – விமல் வீரவன்ச சந்தேகம்

26 Nov, 2025
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு லண்டனில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பானது அரசால் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சந்தேகம் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், இந்த ஆர்ப்பாட்டம் தமிழீழ ஆதரவாளர்களின் கொள்கை ரீதியான எதிர்ப்பு அல்ல என்றும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு புலம்பெயர் இலங்கைத் தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும் கூறினார். மேலும், தொல்பொருள் ஸ்தலங்களில் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் மற்றும் தமிழர்கள் மாவீரர் தினத்தை சுதந்திரமாக அனுஷ்டிக்க அனுமதிக்கப்பட்டது போன்ற முடிவுகளை மறைக்க, புலம்பெயர் தமிழர்களை JVPக்கு எதிராக காட்டும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் அரசால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!