news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

01 Apr, 2024
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். இதேவேளை, 5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,652 ரூபாவுக்கும், 2.3 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 23 ரூபாவினால் குறைக்கப்பட்டு 772 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!