news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லியோ இரண்டாம் பாகம் உருவாகிறதா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

08 Aug, 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இதில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!