news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லெபனானில் மீண்டும் பாரிய குண்டுவெடிப்பு

22 Sep, 2020
தெற்கு லெபனானில் இன்று செவ்வாய்க்கிழமை ஷியா முஸ்லீம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கீழ் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு கிராமமான ஐன் கானாவில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது என லெபனானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான என்.என்.ஏ. அறிவித்துள்ளது. இன்றைய குண்டுவெடிப்பு ஒரு ‘தொழில்நுட்ப பிழையால்’ ஏற்பட்டதாகவும், பல சேதங்களை ஏற்படுத்தியதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் ஹெஸ்பொல்லா அதிகாரிகள் எந்தவிதமான உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!