இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்த தீ விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தபோதும், அதனால் சமாதானம் அடையாத பலர், தலைநகரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்தனர்.
ஆத்திரமடைந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆளும் அரசு பதவி விலகியது.
தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து கட்டுப்பாடிற்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்கள் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஒரு சிலர் தற்போதைய தீ விபத்து, முந்தைய வெடிப்புச் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக தெரிவித்தனர்.
“நாங்கள் மிகுந்த பயத்தில் உள்ளோம். பெய்ரூட்டை அழித்த அந்த வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்போது மீண்டும் அது நிகழ்வதை பார்க்கிறோம்,” என 53 வயது ஆண்ட்ரே முயார்பெஸ் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!