news@ilakkiyainfo.com

பிரிவுகள்

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர் பலி

02 Oct, 2024
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில்எட்டு இஸ்ரேலியபடையினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது.மேலும் எட்டுபேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை லெபனானில் இஸ்ரேலிய படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. யரூன் என்ற லெபனான் கிராமத்தை சுற்றிவளைக்க முற்பட்ட இஸ்ரேலிய படையினருடன் மோதல் இடம்பெற்றதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. வெடிபொருள் ஒன்றை வெடிக்கவைத்து இஸ்ரேலிய படையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று மூன்று தடவை இஸ்ரேலிய படையினருடன் நேரடிமோதலில் ஈடுபட்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!