news@ilakkiyainfo.com

பிரிவுகள்

10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்..

04 Sep, 2015
ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள்.
சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
31-1396248455-21-1395384387-falling
விழுதல்
'உங்களுடைய ஆழ்மனம் காட்டும் சிவப்பு கொடி தான் இந்த கனவு' என்கிறார் லோய்வென்பெர்க் என்னும் பெண்மணி. தங்களுடைய பணி, உறவு அல்லது வேறு ஏதாவது இடங்களில் பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு இந்த வகையான கனவுகள் வரும் என்று இவர் நம்புகிறார். 31-1396248467-21-1395384408-naked
பணியிடம் அல்லது பள்ளியில் ஆடையில்லாம் தெரிதல்
பலவீனம் மற்றும் பயம் ஆகியவற்றையே இந்த கனவு குறிப்பிடுகிறது என்பது வல்லுநர்களின் கருத்தாகும். இந்த வகை கனவுகள் 'பணி உயர்வை ஏற்றுக் கொண்டவர்கள், புதிய பணிக்கு சென்றவர்கள், அல்லது பொது மக்களின் பார்வைக்கு இலக்காக இருப்பவர்களுக்கு வரும்' என்கிறார்கள்.
31-1396248438-21-1395384358-08-1383895266-hormonalshift
தேர்வு எழுதுதல்
பெரியவர்களிடம் இந்த கனவுகள் பள்ளி மற்றும் வேலைகளுக்கு இணையானவையாக வருகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், இந்த இரண்டு இடங்களிலும் கடுமையான நெருக்கடியான சூழல்களை நாம் எதிர் கொள்கிறோம். பணியிட நெருக்கடிகளுடன் இந்த கனவுகள் தொடர்பு பெற்றுள்ளதாக லோய்வென்பெர்க் கூறுகிறார்.
31-1396248442-21-1395384366-12-dead-body
இறத்தல்
இறப்பு என்பதை நாம் எதிர்மறையான விஷயமாக பார்த்தாலும், அது கனவு காண்பவரின் வாழ்வில் நிகழக் கூடிய பெரிய மாற்றத்தை குறிப்பிடுவதாகவே இருக்கும். அது ஏதோ ஒரு புதிய விஷயத்தின் வருகைக்காக, பழைய விஷயம் மறைவதை குறிப்பிடுவதாக இருக்கும். Show Thumbnail
31-1396248450-21-1395384378-dream
வாதம்
கனவு காணும் போது நமது உடல் ஒரு வகையான வாதத்திற்கு உள்ளாகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆதன் மூலம் கனவில் செய்யும் விஷயங்களை நாம் உடல் ரீதியாக செய்யாமல் தவிர்க்கப்படுகிறோம். எனவே வாதம் பற்றி அடிக்கடி கனவு காண்பது என்பது, விழிக்கும் நிலை மேல் இருக்கும் நிலையாக இருக்கிறது. இவ்வாறு வாதம் பற்றி கனவு காண்பவர், தான் விழித்திருக்கும் வேளைகளில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக நினைக்கிறார்.
31-1396248446-21-1395384373-chase
பந்தயத்தில் தோற்கடிக்கப்படுதல்
இது மிகவும் அதிகமாக குறிப்பிடப்படும் கனவுகளில் ஒன்றாகும். கனவின் போது நாம் கொண்டிருக்கும் பயத்தின் காரணமாக இந்த கனவு மிகவும் உயிரோட்டம் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும், இந்த கனவுகளின் காரணம் நாம் தோற்கடிக்கப்படுவதல்ல, நாம் எதைப் பார்த்து ஓடுகிறோம் என்பதைப் பொறுத்ததே. இது போன்று கனவுகளில் பந்தயங்கள் வந்தால், நாம் இது வரை சரியாக கவனிக்காத ஒரு விஷயம், நம்முடைய கவனத்தைப் பெற எத்தனிக்கிறது என்று அர்த்தமாகும்.
31-1396248471-21-1395384543-husband-cheating
துணைவர் ஏமாற்றுதல்
பெரும்பாலானவர்கள் இந்த வகை கனவுகளை நுண்ணறிவுடன் சேர்த்து யோசிக்க வேண்டாம் என்கிறார்கள். உங்களுடைய துணைவர், உங்களுக்கு சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தும் வேளைகளில், அவர் ஏமாற்றுவது போன்ற கனவுகள் வரும். Show Thumbnail
31-1396248463-21-1395384401-late
ஏதோ ஒரு விஷயத்திற்கு தாமாதமாக வருதல்
வால்லஸ் என்பவரின் கருத்துப்படி, யாரோ ஒருவர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறார் மற்றும் அதிகமாக செய்து கொண்டிருக்கிறார் என்று பொருளாகும். இது தொடர்பாக, 'உங்களால் காப்பாற் முடியாத சத்தியத்தை செய்யாதீர்கள்' என்று காலதாமாத்திற்கான கனவைப் பற்றி கிராண்ட் குறிப்பிடுகிறார்.
31-1396248459-21-1395384393-flying
பறத்தல்
இந்த கனவின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை கவனிக்கவும் மற்றும் இயற்கையாகவே அனைத்து விஷயங்களும் நடக்கச் செய்யவும் உதவும். அதே நேரம், 'வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டை மீறி செல்வதையும்' பறத்தல் குறிக்கும் என்று கிராண்ட் கூறுகிறார்.
31-1396248476-21-1395384655-babay
குழந்தை கனவில்
ஒரு குழந்தை வந்தால், புதியதொரு விஷயத்தை அது பிரதிபலிக்கிறது என்று பொருளாகும். அது ஒரு புதிய ஐடியாவாகவோ, புதிய பணிக்கான திட்டமாகவோ, புதியதொரு வளர்ச்சியாகவோ அல்லது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியயில் நடக்கும் குறிப்பிடத்தக்க மாற்றமாகவோ இருக்கும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!