சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து, தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்ற போராட்டம் கிழக்கு பாகிஸ்தானில் தீவிரமடைந்தது.
சுயாட்சிக்கான அங்கீகாரத்துக்காக கிழக்கு பாகிஸ்தான் மக்களின் போராட்டம் பல வழிகளில் விஸ்வரூபமெடுத்த நிலையில், 1971ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி, அதிகாரபூர்வமாக பாகிஸ்தானிடமிருந்து பிரிய வேண்டுமென்ற கோரிக்கையை கிழக்கு பாகிஸ்தான் அறிவித்தது.
வங்காள மொழி பேசிய மக்கள் பாகிஸ்தானில் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடிகள் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை தொடங்கினார்கள்.
அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் மக்களுடைய விடுதலைப் போருக்கு முழுமையான ஆதரவை வெளிப்படையாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், அப்போதைய இந்திய இராணுவத் தளபதியான சாம் மேனக்ஷாவிடம் பாகிஸ்தானுடனான போருக்கு தயாராக இருக்குமாறு இந்திரா காந்தி ஆலோசனை வழங்கியிருந்தார்.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதியன்று 'ஒபரேஷன் கெங்கிஸ் கான்' என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இந்திய நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக பேசிய பிரதமர் இந்திரா காந்தி, இந்தத் தாக்குதல் போருக்கான ஓர் அறிவிப்பு என்றும் அதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.
மேலும், முழு வீச்சில் போரை தொடங்குமாறும் இந்திய படைகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் போர் தொடங்கியது.
இராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தையும் களமிறக்கி, தரைவழித் தாக்குதல், வான்வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல் என்று கடும் மும்முனைத் தாக்குதல்களை பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்டது.
இந்த போரில் இந்தியாவின் மேற்கு பகுதி ஊடாக பாகிஸ்தான் படைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதும் கிழக்கே டாக்காவை கைப்பற்றுவதும் இந்திய படைகளின் குறிக்கோளாக இருந்தது.
அடுத்த நாளான டிசம்பர் 16ஆம் திகதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, 93,000 படைவீரர்களோடு இந்திய இராணுவத்திடம் சரணடைந்தார்.
இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் 'வங்கதேச'மாகவும், மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன.
இந்தப் போரில் பிரிந்த பல குடும்பங்கள் இன்று வரை, இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தில், வடக்குப் பகுதியில் வெகு தூரத்தில் டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. போரின் பின்னர், இந்திய ஆளுகையின் கீழ் இவை வந்தன.
லடாக்கில் பௌத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், இந்த நான்கு கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும் முஸ்லிம்களாக இருந்ததுடன், 1971ஆம் ஆண்டு வரையில், இந்த நான்கு கிராமங்களுமே பாகிஸ்தானின் பகுதிகளாக இருந்தன.
இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டதையடுத்து அவற்றின் அடையாளங்கள் மாறின.
1971 டிசம்பர் 16ஆம் திகதி பாகிஸ்தான் படைகள் இந்திய இராணுவத்திடம் சரணடைந்த நாளில், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகியது.
அன்றிலிருந்து 'வங்கதேசம்' சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான புது அரசாங்கத்தை இந்தியா அங்கீகரித்தது.
அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் வங்கதேசம், டிசம்பர் 16ஆம் திகதியை வெற்றித்தினமாக கொண்டாடுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களை போற்றும் வகையில் அந்த நாள், 'விஜய் திவாஸ்' என்ற பெயரில் இந்தியாவில் 'வெற்றித்தினமாக' அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!