இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் 2018இல் பேச்சு வார்த்தையைத் தொடங்கிய பின்னர் வடகொரிய எல்லைக்குள் இருக்கும் இந்த மையம் மறுசீரமைக்கப்பட்டது. தென் கொரிய மற்றும் வட கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய தங்களது ராணுவம் தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரித்திருந்த சமயத்தில் இது நிகழ்ந்துள்ளது. வட கொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் தென் கொரிய எல்லையிலிருந்து வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசுவதையும், பிரசார வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களை அனுப்புவதையும் கண்டிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது. ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்தநிலையில், எல்லை முன்வரிசையில் ராணுவ கோட்டையை உருவாக்கவும், ராணுவ கண்காணிப்பை அதிகரிக்கவும் தயாராக இருப்பதாக வட கொரிய ராணுவம் தற்போது கூறியுள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் வட கொரியா என்ன கூறியது?
1950களில் நடந்த கொரியப் போரின் போது வட கொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது. எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வந்ததாக வட கொரிய ராணுவம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியுள்ளது. மேலும், அரசு உத்தரவுகளைச் செயல்படுத்த உயர் எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ''தென் கொரிய அரசுடன் நமது உறவுகளை முறிக்க இது சரியான நேரம் என நினைக்கிறேன்,'' என வட கொரிய அரசியலில் முக்கிய பதவியில் உள்ள கிம் யோ-ஜோங் கூறியிருந்தார்.வட கொரியா ஏன் இப்படி செய்கிறது?
வட கொரியாவின் இந்த எச்சரிக்கையைத் தென் கொரியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார் தென் கொரியத் தலைநகர் சோலில் உள்ள பிபிசி நிருபர் லாரா பிக்கர்.
தனது தென்கொரிய சுற்றுப்பயணத்தின்போது கொரிய நாடுகளின் எல்லைக்கு சென்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். எல்லையில் அனுப்பப்படும் பலூனில் என்ன உள்ளது?
வட கொரிய மக்களுக்கு இணைய வசதியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகள் மூலம் மட்டுமே அவர்களால் செய்திகளை அறிய முடியும். இந்த நிலையில் தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய அரசை விமர்சிக்கும் பிரசுரங்கள், உணவு, செய்தித் தாள்கள், கொரிய நாடகங்கள், வானொலி போன்றவற்றைக் கொண்ட பெரிய பலூன்களை வட கொரியா நோக்கி அடிக்கடி அனுப்பப்படும். இவற்றை வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா வந்தவர்களைக் கொண்ட குழு செய்து வந்தது. இந்த குழுவின் செயல்களால் எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என கூறி இந்த குழுக்களைத் தடுக்க தென் கொரிய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!