news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறல்; கடற்றொழிலாளர்கள் கவலை

10 Jan, 2026

வடக்கு கடற்பரப்பான சுண்டிக்குளம் - மாத்தளன் பகுதிகளில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் கடற்பரப்புகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்கிறார்கள். இதனை சாத்தியமாக பயன்படுத்தி இந்திய இழுவைமடி படகுகள் சுண்டிக்குளம் மற்றும் மாத்தளன் கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அருகே வந்து அச்சமின்றி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கடலில் தற்போது இறால் சீசன் என்பதால், இந்திய படகுகள் இதனை அறிந்து இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுண்டிக்குளம் மற்றும் சாலை பகுதியில் இலங்கை கடற்படையின் முக்கிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கிற போதிலும், இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. நீண்டகால கோரிக்கைகளுக்கும் இதுவரை எந்தவொரு நிரந்தர தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!