சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மன்னாரில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
கிளிநொச்சியில் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நீதிமன்றம்
யாழ்ப்பாண நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போன்று சாவகச்சேரி நீதிமன்றம் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறாக பருத்திதுறை ,மல்லாகம், ஊர்காவற்துறை தீதிமன்றங்களின் சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!