news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வடக்கு மாகாணத்தில் டிசம்பர் 12 வரை கனமழை தொடரும்! - மன்னார், யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு தாழ்நில மக்களுக்கு 'வெள்ள அபாயம்' எச்சரிக்கை!

10 Dec, 2025

இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் டிசம்பர் 12, 2025 வரை தொடரும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள், குறிப்பாக குளங்களின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள், வெள்ள அபாயம் குறித்து மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய, தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண மக்களும் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!