news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்..

17 Dec, 2023
வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர்17ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 16ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!