ரஷ்யாவில் 13 வயது மாணவியை 10 வயது சிறுவன் கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்போது தான் 15 வயதான சிறுவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்திலுள்ள ஸேலேஸ்னோகோர்ஸ் நகரைச் சேர்ந்த 13 வயதான சிறுமி தார்யா என்பவரே இவ்வாறு கர்ப்பம் தரித்தார்.
உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வீங்கியுள்ளதாக அச்சிறுமியின் பெற்றோர் எண்ணினர். ஆனால், பின்னர் அச்சிறுமி கர்ப்பமாகவுள்ளமை தெரியவந்தது.
தார்யாவுடன் ஐவன்
தனது கர்ப்பத்துக்கு 10 வயது சிறுவனான ஐவனே காரணம் என அச்சிறுமி கூறியமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அச்சிறுவனும் தானே தார்யாவின் கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தான்.
ரஷ்யாவின் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நிகழ்ச்சியிலும் இவ்விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டது. 13 வயது சிறுமி தார்யா, 10 வயது சிறுவன் ஐவன் ஆகியோர் தமது தாய்மார்களுடன் அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.

தாயாருடன் தார்யா
மேற்படி சிறுமி வேறு யாருடனும் சேர்ந்திருக்கவில்லை எனவே தன்னைத தவிர வேறு யாரும் அக்குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியாது என ஐவன் கூறினான். தனது மகன் கூறுவதை தாம் நம்புவதாக ஐவனின் தாயார் கெலினா தெரிவித்திருந்தார்.
தனது மகள் கூறுவதை தான் நம்புவதாக தார்யாவின் தாயார் எலினாவும் தெரிவித்திருந்தார். பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் அன்ட்றே மலாகோவ் நடத்திய இந்நிகழ்ச்சியில் மருத்துவர் இயூஜினி கிறிகோவும் பங்குபற்றினார். மேற்படி சிறுவன் இக்குழந்தைக்கு தந்தையாக இருக்க முடியாது என அவர் கூறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தார்யா, ஐவன் கலந்துகொண்டபோது…
நாம் 3 தடவைகள் ஆய்வு கூடத்தில் சோதனை நடத்தினோம். பெறுபேற்றில் தவறு ஏற்பட்டிருக்க முடியாது என அவர் கூறினார். இது குறித்த தகவல்கள் பல நாடுகளின் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின.
இந்நிலையில், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை ஐவன் அல்ல. நான் 15 இளைஞன் ஒருவரால் கட்டாயப்படுத்தி, பாலியல் உறவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன் எனக் கூறியுள்ளாள்.
இச்சிறுமிக்கு தற்போது 14 வயதாகுகிறது.

தாயாருடன் ஐவன்இதனால் 15 வயதான மேற்படி சிறுவன் தற்போது ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிறுவன் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!