news@ilakkiyainfo.com

பிரிவுகள்

30 வயது பெண்ணின் தோற்றத்தில் 64 வயதான பாட்டி!

12 May, 2016

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 64 வய­தான பாட்டி ஒருவர், தனது திட­காத்­தி­ர­மான தோற்­றத்­தினால் வியக்க வைக்­கிறார். வென்டி இடா எனும் இவர் 30 வய­தா­னவர் போன்று காணப்­ப­டு­கிறார்.

 எனினும் இவ­ருக்கு 41 வய­தான ஒரு மகள் மற்றும் 40 வய­தான  ஒரு மகனும் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 3 பேரப்­பிள்­ளை­களும் உள்­ளனர்.

1656704உடற்­ப­யிற்­சியில் ஈடு­ப­டு­வதில் தீவிர ஆர்வம் கொண்டவர் வென்டி இடா. 57 கிலோ­கிராம் எடை­யுடன் இவர் காணப்­ப­டு­கிறார். துன்­பு­றுத்­தல்கள் மிகுந்த தனது திரு­மண வாழ்க்கை முடி­வுற்­றதன் பின்­னரே உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட ஆரம்­பித்­தாராம் இவர்.

 பெண்­க­ளுக்­கான உடற்­கட்டுப் போட்­டி­களில் ஏரா­ள­மான பரி­சு­களை வென்ற வென்டி இடா கின்னஸ் சாத­னை­க­ளையும் படைத்­தவர். தனது திரு­மண வாழ்­வின்­போது கண­வரின் பெரும் துன்­பு­றுத்­தல்கள், கொடு­மை­களை அனு­ப­வித்­த­தாகக் கூறும் வென்டி இடா, 43 ஆவது வயதில் அத் ­தி­ரு­மண பந்­தத்­தி­லி­ருந்து விடு­பட்டார்.

அப்­போது சுமார் 89 கிலோ­கிராம் எடை­யு­­டை­ய­வ­ராக அவர் காணப்­பட்­டாராம்.

'தொல்­லைகள் மிகுந்த எனது திரு­மண வாழ்­வி­லி­ருந்து தப்­புவேன் என நான் எண் ­ணி­யி­ருக்­க­வில்லை.

 1656706

பின்னர் அதி­லி­ருந்து விடுபட்­ட­வுடன் எனக்கு ஏதேனும் மாற்றம் தேவையாக இருந்­தது. எனது கவ­னத்தை திசை­தி­ருப்பி எனது தலையை தெளி­வாக்கிக் கொள்­வ­தற்­காக நான் உடற்­ப­யி­ற்­சியில் ஈடு­பட ஆரம்­பித்தேன்' என்­கிறார் வென்டி இடா. 'உடற்­ப­யிற்­சிக்கு சிறந்த பலன் கிடைத்­தது. முன்னர் நான் 89 கிலோ­கிராம் எடை­யுடன் இருந்தேன். இப்­போது எனக்கு 64 வய­தா­கு­கி­றது.  57 கிலோ­கிராம் எடையைக் கொண்­டுள்ளேன். இந்த வயதில் இது சிறந்த எடை. நான் எனது வயதை கூறும்­போது அதை நம்­பு­வ­தற்கு மக்கள் மறுப்­பார்கள். நான் 30களின் ஆரம்­பத்தில் இருப்­ப­தாகப் பலர் கரு­து­கின்­றனர். எனவே நான் கூறு­வது உண்மை என்­பதை நிரூ­பிப்­ப­தற்­காக நான் எனது சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தைக் காண்­பிப்பேன். 165670522 வய­தான பலர்­ கூட நான் அவர்­களின் வயதை ஒத்­தவள் என எண்­ணு­கின்­றனர். 43 வய­தான எனது மகள் ஸ்கையும் நானும் வீதியில் செல்லும் போது நாம் இரு­வரும் சகோ­த­ரிகள் எனக் கரு­து­ப­வர்­களும் உள்­ளனர். இப்­படி அடிக்­கடி நடக்­கி­றது. நான் சிரித்­து­விட்டு எனது கதையைக் கூறுவேன். அவர்­களும் இதை செய்­யலாம் என நான் அவர்­க­ளிடம் நான் கூறுவேன். 43 வய­துக்கு மேல் நான் உயிர் வாழ்வேன் என நான் முன்னர் எண்­ண­வில்லை. இப்­போது நான் ஏனைய பெண்­க­ளுக்கு உதவ விரும்­பு­கிறேன்' என வென்டி இடா கூறு­கிறார். 1656701
தினமும் இரு மணித்­தி­யா­லங்கள் உடற்­ப­யிற்­சியில் ஈடு­படும் வென்டி இடா. உடற்­ப­யிற்சிப் பயிற்­று­விப்­பா­ரா­ள­ரா­கவும் விளங்குகிறார். 1656703
2012 ஆம் ஆண்டு இவர் 60 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய வேளையில், செயற்பாட்டு நிலையிலுள்ள உலகின் மின வயதான உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் என கின்னஸ் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!