news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்த ஐ.தே.க.; போட்டியிட்ட எவரும் வெற்றிபெறவில்லை

07 Aug, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அந்தக் கட்சி படுதோல்வியடைந்தது. அந்த மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எந்த உறுப்பினரும் வெற்றிபெறவில்லை. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே பொதுவாக வெற்றியைப் பெற்று வருவது வழமை. ஆனால், இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எந்த ஒரு உறுப்பினரும் தெரிவாகவில்லை. கொழும்பில் எந்த ஆசனத்தையும் பெறாமல் தோல்வியடைவது இதுவே முதல் தடவையாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!