news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பல வருடங்களின் பின் ஆவலுடன் தனது வீட்டை பார்க்க வந்த முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

07 Jan, 2020

பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்க்க வந்த முதியவர் இடுப்பு வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த கந்தையா பாலே ஈஸ்வரன் (வயது-70) என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.

கடந்த டிசெம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு ஆவலாக வந்த நிலையில் வீட்டு வளவினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது கடந்த 2ஆம் திகதி இவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இறப்பு விசாரணையினை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!