news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வவுனியாவில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் பலி !

02 Sep, 2023
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. வெள்ளிக்கிழமை (1) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவியந்திரம் ஒன்று பயணித்துள்ளது. இதன்போது தீடீர் என கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. இதனால் உழவியந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் முன்னமே அவர் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!