வவுனியாவில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா - போகஸ்வெவ பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை கண்ணாடி போத்தலால் தனது வயிற்றுப்பகுதியை குத்தி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!