மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
மீட்க்கப்பட்ட இரு மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் அவர்கள் மீதும் இறந்த மாணவர்களது உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்களும் அதிகமாக பிரசன்னமாகி இருந்தமையால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவும் ஊடகவியலாளர்கள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இணைந்து இருதரப்பினரையும் சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்ததுடன் துணைவேந்தரை பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்தும் அழைத்து சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14வயது மற்றும்,15வயதுடைய மாணவர்களே மரணமடைந்துள்ளார்கள் என்பதுடன்
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!