இன்றைய நாணய மாற்று விகிதம்
21 Oct, 2026
புத்தளம் பெரிய பள்ளியிலிருந்து தொழுகைக் கடமையை நிறைவேற்றிவிட்டு மீன்வாடிக்குச் சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 74 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!