news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வாகன விபத்தில் 2 வயது சிறுவன் பலி

09 Apr, 2024
வெல்லவாய – மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வௌியாகியுள்ளன. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தையும் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது . விபத்தில் உயிரிழந்த சிறுவன் வெல்லவாய ஆனபல்லம பிரதேசத்தைச் சேர்ந்தன் என்பதுடன், விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதியை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!