news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ?

10 Oct, 2022
வாடகைத்தாய் மூலம் நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005 இல் தமிழில் 'ஐயா' படத்தில் அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கிறார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், "நானும், நயன்தாராவும் அப்பா அம்மா ஆகி விட்டோம் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிகள் இணைந்து குழந்தைகள் வடிவில் வந்துள்ளன. எங்கள் உயிர், உலகத்துக்கு உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களும் தேவை" என்று பதிவிட்டு உள்ளார். அதோடு குழந்தைகளின் கால்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களூம் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நயன்தாரா கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் வெளியிடவில்லை. இதனால் அவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. எனினும் இது குறித்து விக்கி - நயன் தரப்பு எதுவும் குறிப்பிடவில்லை. ஏற்கனவே இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!