ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
ஆனால் அங்கே நடந்து வரும் சில மோசடிகள் அவரை அதிர்ச்சியடைய வைக்கிறது. கதையில் தனியார்ப் பள்ளி முதலாளியாக வருகிறார் சமுத்திரக்கனி.
கல்வியை வியாபார கண்ணோட்டத்தில் பார்க்கும் திருப்பதி (சமுத்திரக்கனி), அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்தால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என நினைத்து நாயகனுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே வாத்தி திரைப்படத்தின் கதை. நாயகனின் சக ஆசிரியராக ஆங்காங்கே கதையில் வந்து போகிறார் நடிகை சம்யுக்தா. இந்த திரைப்படத்துக்கு சில முன்னணி ஊடகங்கள் அளித்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.
இன்று வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே வரத்தொடங்கியிருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் இந்த படம் குறித்து எழுதியிருக்கும் விமர்சனங்களை இனி பார்க்கலாம்.
துருத்தலாக இருக்கும் தனுஷின் மிகை நாயகத்தன்மை
'தனியார் மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை வாத்தி திரைப்படம் புரட்டுவதாக` இந்து தமிழ் திசை கூறுகிறது.
ஆனால் அதேசமயம் 'படம் முழுக்க இழையோடும் தனுஷின் மிகை நாயகத்தன்மை துருத்தலாக இருக்கிறது எனவும், ஒற்றை ஆளாக தனுஷ் சொல்வதை ஊரே கேட்பதும், அவர்கள் அனைவரையும் ஒரே ஆளாக நின்று படிக்க வைப்பதும் என படத்தில் தனுஷ் இல்லை ; மொத்தப் படமுமே தனுஷாகத்தான் இருக்கிறது` எனவும் விமர்சித்திருக்கிறது.
`ஜீ.வி. பிரகாஷின் இசையில் 'வா வாத்தி', 'நாடோடி மன்னன்' ஆகிய பாடல்கள் முத்திரை பதித்திருப்பதாகவும், படத்தினுடைய ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கச்சிதமாக அமைந்திருப்பதாகவும்` இந்து தமிழ் திசை கூறுகிறது.
ஆனால், `வெகுஜன சினிமாவுக்கான அம்சங்களுடன் படம் தொடங்கினாலும், தெலுங்கு படம் பார்க்கும் உணர்வை கொடுக்காமலில்லை என்றும், பொருந்தாத டப்பிங் அதற்கு உதாரணம்` என்றும் இந்து தமிழ் விமர்சித்திருக்கிறது.
அதேப்போல் படத்தின் காதல் காட்சிகளும் படத்துடன் ஒட்டாத உணர்வை ஏற்படுத்துகிறது எனவும் தனது விமர்சனத்தில் இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.
`வாத்தியை` தாங்கி பிடிக்கும் தனுஷின் நடிப்பு
`வழக்கமான கமர்சியல் திரைப்படத்திற்கான அம்சங்களுடன் வாத்தி படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவ்வபோது பார்வையாளர்களின் நாதுத்டிப்பை பிடிக்கும் வண்ணம் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது` என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப்
படத்தின் மொத்த பலமும் தனுஷாகத்தான் இருக்கிறார் எனவும், கதையில் மாணவர்களை படிக்க வைப்பதற்கு புது விதமான யோசனைகளுடன் தனுஷ் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுருக்கிறது.
அதேப்போல் கல்வி குறித்தும், சமத்துவம் குறித்தும் படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது எனவும், தனுஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோரின் ஜோடி நன்றாக அமைந்திருக்கிறது எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
ஆனால் படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கபடவில்லை எனவும், வழக்கமாக படங்களில் பார்க்கும் ஒரு சாதாரண வில்லன் தோரணையிலேயே அவர் வந்து போகிறார் எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
காட்சிகளில் லாஜிக் இல்லை
`படத்தின் முழு கதையையும் தனுஷ் மட்டுமே தனது தோள்களில் தூக்கி சுமக்கிறார் என்றும், அவரது திறமை இந்த படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறது` எனவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டுமென்ற ஒரு நல்ல கதைக்கருவை இந்த படம் கொண்டிருந்தாலும், அதனை பார்வையாளர்களுக்கு சரியான முறையில் கடத்துவதற்கு தவறவிட்டுவிட்டது என்றும் இந்தியா டுடே கூறியுள்ளது.
நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல் காட்சிகளும்,படத்தின் வில்லன் கதாப்பாத்திர வடிவமைப்பும் மிகுந்த சினிமாத்தனத்துடன் இருக்கிறது என இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
அதேப்போல் ஏற்கனவே நாம் பார்த்த சாட்டை, ராட்சசி போன்ற திரைப்படங்களின் சாயலில்தான் இந்த படமும் நகர்கிறது எனவும் இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
படத்தின் சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் இடம்பெறுகிறது எனவும், குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி மிகவும் தொய்வடைந்து செல்வதாகவும் இந்தியா டுடே கூறுகிறது. படத்தில் தனுஷை தவிர மற்ற நடிகர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!