இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை; ஆனால் பெரும்பான்மை இல்லை - முடிவுகள் உணர்த்துவது என்ன?
29 Oct, 2026
காசாவில் மோதல் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற மிகவும் மனதை வருத்து துன்பியல் சம்பவம் இது என்கின்றார் நாசெர் மருத்துவர் மனையின் தாதியர் பிரிவின் தலைவர் முகமட் சஹெர்.'குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த குழந்தை நல மருத்துவருக்கு இது நிகழ்ந்திருக்கின்றது,ஒரு கணதீயில் அவரது தாய்மை திருடப்பட்டுள்ளது "என அவர் குறிப்பிடுகின்றார்.
காசாவின் சுகாதார அமைச்சு வெளியிட்ட கார்டியன் உறுதிப்படுத்திய படங்கள் வீடியோக்கள்,எரிபொருள் நிலையமொன்றிற்கு அருகில் உள்ள நஜாரின் வீட்டிற்குள் இருந்து எரிந்த, துண்டிக்கப்பட்ட, குழந்தைகளின் உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்தன.அந்த வீடு இன்னமும் தீயில் எரிந்துகொண்டிருந்தது.
'வீட்டின் மீது குண்டு வீச்சு இடம்பெற்றதாக அறிந்ததும் நான் உடனடியாக காரை வீட்டை நோக்கி செலுத்தினேன்,வீட்டிற்கு சென்றவேளை நான் அதிர்ச்சியடைந்தேன்,எனது மருமகன் ஆதாமை கண்டேன்,அவன் உயிர் பிழைத்திருந்தான் ஆனால் இடிபாடுகளிற்குள் காணப்பட்டான் அலாவின் கணவரின் சகோதரரான 50 வயது அலி அல் நஜார் "தெரிவித்தார்.
'அவன் உடல் கருகிய நிலையில் காணபட்டது அவனது உடைகள் முற்றாக கிழிந்திருந்தன,ஆனால் அவன் மரணிக்கவில்லை,"என மேலும் தெரிவித்த அலி அல் நஜார் 'எனது சகோதரன் மற்றைய பக்கத்தில் வீழ்ந்து கி;டந்தான்,தலையிலிருந்தும் மார்பிலிருந்தும் குருதி வெளியேறிக்கொண்டிருந்தது,அவரது கைதுண்டிக்கப்பட்டிருந்தது,அவர் மிகவும் கஸ்டப்பட்டு சுவாசித்துக்கொண்டிருந்தார்" என தெரிவித்தார்.
அலி மருத்துவ குழுவை உடனடியாக அழைத்துவிட்டு உயிர்பிழைத்திருந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அதன் பின்னர் அவர் காணமால்போயிருந்த தனது ஒன்பது மருமகன்களையும் தேட தொடங்கினார். '9 குழந்தைகளில் யாராவது உயிருடன் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் நான் அந்த வீட்டை சுற்றி தேட தொடங்கினேன்,குண்டு வீச்சின் அதிர்ச்சியால் அவர்கள் வீட்டிற்கு வெளியே தூக்கி எறியப்பட்டிருப்பார்கள் என நான் கருதினேன், ஆனால் கவலையளிக்கும் விதத்தில் முதலாவது எரியுண்ட உடல் கிடைத்தது, தீயை முற்றாக அணைத்த பின்னர் ஏனையவர்களின் உடல்களை மீட்டோம்,சிலரின் உடல்கள் எரியுண்டிருந்தன சில உடல்கள் முற்றாக சிதைவடைந்திருந்தன" என அவர் தெரிவித்தார். தனது மகள் ரெவானின் உடலை மீட்புபணியாளர்கள் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்ட தருணத்தில் வைத்தியர் அலா அல் நஜார் தனது வீட்டிற்கு சென்றார்,தனது மகளின் உடலை இறுதியாக ஒரு தடவை தொட்டு தழுவுவதற்கு அனுமதி தருமாறு அவர் கண்ணீர் மல்க மன்றாடினார். 'ரெவானின் உடலில் மேற்பகுதி முற்றாக எரியுண்டிருந்தது, தோளோ தசையோ இல்லை,என தெரிவித்த அலி எனது சகோதரனின் பிள்ளைகளின் இரண்டு உடல்களை எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை,12 வயது யஹ்யாவினதும்,ஆறு மாத பெண்குழந்தைசைடனினதும் உடல்களை மீட்க முடியவில்லை "என தெரிவித்தார். நஜார் மருத்துவமனைக்கு சென்று தனது கணவனினதும் மகனினதும் நிலையை பார்வையிட்டார்,மருத்துவமனையின் பிரேத அறைக்கு பிள்ளைகளின் உடல்கள் ஒவ்வொன்றாக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் அவற்றை அடையாளம் காணும் நிலையில் தாய் இருக்கவில்லை என குறிப்பிட்டன. theguardianGaza Doctor Alaa Al-Najjar Loses Nine Children in israeli Air-Strike
Dr Alaa al-Najjar is a paediatric specialist at Tahrir Hospital inside Nasser Medical Complex in Khan Younis. At dawn on 23 May 2025 her husband, Dr Hamdi al-Najjar,drove her to the hospital and returned to + pic.twitter.com/703qFb7gKe — Dr. Zain Al-Abbadi (@ZainAbbadi11) May 25, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!