news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் படுகாயம்

26 Nov, 2023
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார். வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!