news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனையில் பெண் கொலை!

11 Jun, 2020
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை குசைன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்குட்டி ரகுமத்தும்மா வயது (60) என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (11) வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் குறித்த பெண்மணி ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் இடத்துக்குச் சென்ற பொலிஸார்   சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!