உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
திமுக கவுன்சிலர் ஆயுப் கான்
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் இன்று காலை வழக்கம் போல குப்பை சேகரிக்கும் வண்டி வந்துள்ளது.
அப்போது, அந்த வண்டியை நிறுத்திய அந்த பகுதி திமுக கவுன்சிலர் ஆயுப் கான், இனிமேல் தனது பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது எனவும் விசில் சத்தம் இந்த வார்டில் கேட்கக் கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, சொந்த செலவில் உங்கள் வண்டியில் ஒலிப்பெருக்கியைப் பொறுத்துகிறேன். இனி நீங்கள் அதைப் பயன்படுத்தி குப்பை சேகரித்துக்கொள்ளலாம் எனவும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது,
அரசியல் நடவடிக்கையா அல்லது மைதான நிர்வாக எடுத்த நடவடிக்கையா என பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழலில், தற்போது தூய்மைப் பணியாளர் தங்கள் வார்டில் விசில் பயன்படுத்தக் கூடாது; விசில் சத்தமே கேட்கக் கூடாது என திமுக கவுன்சிலர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
என் வார்டுல இனிமே விசில் சத்தம் கேட்ககூடாது விசில் ஊத கூடாது! தூய்மை பணியாளர் வைத்திருந்த விசிலை பிடிங்கி குப்பையில் வீசி உத்தரவு போட்ட அழுகினி பீமுக கவுன்சிலர்😂அதையும் மீறி சத்தம் கேட்டா காதை செவிடாக்கிக்குவான் போலயே ஆலமரம் பூலமரம்னுட்டு இருந்தானுவ என்னடா இப்படி அழுவுறீங்க 😭 pic.twitter.com/NbHX3js0Qq
— 𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 (@TVK_Dinshu) February 10, 2026
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!