விஜய் சேதுபதியின் 2003 திருமண பத்திரிக்கை வைரல் – ரசிகர்கள் ஆச்சரியம்!
விஜய் சேதுபதி–ஜெஸ்ஸி தம்பதியின் 2003ஆம் ஆண்டு திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஹிட்ஸ் கொடுத்து வரும் வேளையில் பழைய புகைப்படம் இணையத்தை கிளப்பி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு மகாராஜா திரைப்படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்ற இவர், இந்த ஆண்டு மீண்டும் தலைவன் தலைவி படத்தின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார்.
ஒரு பக்கம் சினிமாவில் அசத்தி வரும் இவர், மற்றொரு பக்கம் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் வரிசையாக அதிகரித்து வருகின்றனர்.
2003 காதல் திருமண பத்திரிக்கை – இணையத்தில் வைரல்
விஜய் சேதுபதி தனது மனைவி ஜெஸ்ஸியை காதலித்து, 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் சூர்யா மற்றும் ஒரு மகள் உள்ளனர். சூர்யாவும் தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி–ஜெஸ்ஸி தம்பதியின் 2003ஆம் ஆண்டு திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பழைய பாரம்பரிய வடிவமைப்பில் அமைந்துள்ள இந்த பத்திரிக்கை ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.
ரசிகர்கள்:
“எவ்வளவு சிம்பிளான பத்திரிக்கை!”
“முதல்முறையாக பார்த்தோம்!”
என்று கமெண்டுகள் பதிவு செய்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!