இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
முன்னதாக, இந்த விபத்தில் அவரது சகோதரரும் பலியாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது சகோதரரின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
இந்தச் சடங்கின்போது தனது சகோதரரின் உடலை விஸ்வாஸ் சுமந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதில், அவர் காயங்களுக்கு பிளாஸ்திரி போட்டப்படியே செல்கிறார். இந்த வீடியோ பார்க்கும் மனங்களை உருக்கியது.
மறுபுறம், அவர் இந்த விபத்தில் இருந்து தப்பித்தது குறித்தான ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த விபத்தின்போது அவர் 11a என்ற இருக்கையில் பயணித்துள்ளார்.
இந்த இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. அதாவது, நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த இருக்கை அமைந்துள்ளது.
இந்தச் சூழலில்தான் விபத்து நடைபெற இருந்த சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத அவர் விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி வந்ததும் விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு உயிர் பிழைத்தார்.
விஸ்வேஷ் குமார்எக்ஸ் தளம் அப்போது அவர் எகிறிக் குதித்த இடத்தில், அதாவது விபத்து நடைபெற்ற இரண்டு கட்டடங்களுக்கு இடையே, தரையில் தளர்வான மணல் இருந்துள்ளது. அந்த தளர்வான மணலே அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. ஒருவேளை, அங்கு தளர்வான மணலுக்குப் பதிலாக வேறு கற்களோ அல்லது கடினமான பாறைகளோ இருந்திருந்தால் அவருக்கும் பெரிய காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்து விமானம் மோதிய வேகத்தில், அதிலிருந்து எரிபொருள் வெளியேறி தீப்பிடித்துள்ளது. இதனாலேயே பல உயிர்கள் பலியாகி உள்ளன. அந்த வகையில் விஸ்வேஷ் குதித்த இடமும் மணலாகிப் போனதால் தீ பரவவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Ramesh Vishwas Kumar, the lone survivor of the Ahmedabad Air India crash, carried his brother Ajay’s body during the funeral, creating a deeply emotional moment. pic.twitter.com/x0ZckpCulR
— Impostor (@Impostor_iam) June 18, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!