'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
சூர்யகுமார்
கோலியின் பலத்தால் கோப்பை வெல்லுமா இந்தியா?
5 போட்டிகளில் விளையாடி 273 ரன்கள் சேர்த்து 2016 டி20 தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த 2வது வீரராக ஜொலித்தார். அந்த ஆண்டு இந்தியா அரையிறுதி வரை சென்று வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியைத் தழுவியது.
நடப்பு தொடரில் அடுத்தடுத்து 2 முறை அரைசதம் விளாசி பலமிக்க வீரராக கோலி உருவெடுத்திருப்பது இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை மீண்டும் வெல்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
கேப்டன்ஸியில் இருந்து விலகியது, ஒரு மாத காலம் பேட்டை தொடாமல் இருந்தது, மன ரீதியான அழுத்தம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்த விராட் கோலி, இன்று தனது பேட்டால் வசைகளுக்கு பதிலடி கொடுத்து, இலக்கில் குறியாக செயல்படுகிறார். விராட் கோலி நிச்சயம் எதிரணிகளுக்கு ஆபத்தான வீரராகவே நடப்பு தொடரில் வலம் வருவார்.
குறைவான ரன்களை எடுத்த இந்தியா
இதுதவிர, இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் ரன் சேர்க்கும் வேகம் சற்று குறைவு என்றாலும் மறுமுனையில் சூர்யகுமாருடன் இணைந்து ஆடியது எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்க உதவியது.
கோலி சில பந்துகளை சிங்கிள் தட்டி சூர்யகுமாருக்கு ஸ்டிரைக் வழங்க, அவர் தனது சிக்னேசர் ஷாட்களை ஆடி பொளந்து கட்டினார்.
வெறும் 25 பந்துகளில் 51 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார் சூர்யகுமார். முன்னதாக ரோஹித் சர்மாவும் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார்.
இருந்தபோதிலும் தான் ஆடிய விதத்தில் மகிழ்ச்சியில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். களம் எப்படி இருந்தாலும் ரன்களை நாம் குவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
டி20 வரலாற்றில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து குறைந்த ரன்களை இந்திய அணி சேர்த்தது இதுவே முதல்முறை.
விராட் - சூர்யா
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியா இனி வங்கதேசம், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன.
இதில் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தரும் என்பதால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!