news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாடின் போது சிறுமி ஒருவரால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு !

08 Jul, 2023
விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சிறுமி ஒருவரால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களான இரண்டு சிறார்களும் விளையாடிக் கொண்டிந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் 12 வயதான சிறுமி ஒருவரால் 10 வயதான சிறுவனின் நெற்றிப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 4ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சிறுவன் நீர்க்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட 12 வயதான சிறுமியை, கைதுசெய்து நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பாதுகாப்பு காரணமாக சிறுவர் நிலையமொன்றில் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளதாகவும் அரவது தந்தை வேறு திருமணம் முடித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!