உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
விழுப்புரம் அருகே பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி இருவர் எரித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக பிரமுகர்கள் இருவரையும் விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்த்தவர் ஜெயபால். ஜெயபால் அதே பகுதியில் சிறிய கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஜெயபாலின் வீட்டிலிருந்து புகை மூட்டமாக வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஜெயபாலின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, மருத்துவமனையில் குற்றவியல் நீதிபதியிடம் தன்னை கட்டிப்போட்டு முருகன் மற்றும் கலியபெருமாள் என்ற இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதில், சிறுமி குறிப்பிட்ட முருகன் என்பவர் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் மற்றும் கலியபெருமாள் என்பவர் அதிமுக கிளை செயலாளர் ஆவர். அதன் பிறகு, சிறுமியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் திருவெண்ணெய் நல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, நேற்று முதல் மருத்துவர்கள் சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இச்சூழலில், இன்று காலை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி உறுதிபடுத்தியுள்ளார். முன்னதாக, சிறுமி உடல் எரிந்த நிலையில் பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் என்னை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர்," என்று கூறியவாறு அழுகிறார். இது தொடர்பாக பிபிசி தமிழ் செய்திக் குழுமம் சிறுமியின் தந்தை ஜெயபால் தொடர்பு கொண்டு கேட்டபோது, "முன் விரோதம் காரணமாக எனது மகளை இவ்வாறு செய்துவிட்டனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு முருகன், கலியபெருமாள் உட்பட மேலும் 6 நபர்கள் எனது தம்பியின் கையை வெட்டியுள்ளனர். அந்த வழக்கிற்கு நீதி வழங்கக்கோரி இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறேன். இதனிடையே, சனிக்கிழமை இரவு சிலர் எனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த எனது மகனைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாகப் புகார் கொடுக்க நேற்று காலை நானும் எனது பெரிய மகனும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தோம்," என்றார்.ஸ்டாலின் கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலிய பெருமாள், முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்," என தெரிவித்துள்ளார். மேலும், "குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழ
ங்கப்படும் தண்டனையே இனி இது போன்ற சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றும்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!