news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விஷம் பருக்கப்பட்ட பிள்ளைகளுள் ஒருவர் உயிரிழப்பு

02 Jan, 2023
தாயால் விஷம் கொடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளை பொரளை சீமாட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீரிகம- லோலுகொட பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் தனது 5 மற்றும் 8 வயதான இரு பிள்ளைகளுக்கு விஷத்தை பருகக் கொடுத்து தானும் பருகியுள்ளார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்ட குறித்த மூவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக சீமாட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே 5 வயதுடைய பிள்ளை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!