news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீடுகளுக்குள் நுழைந்து குளியல் அறைக்குள் ’கெமரா’ பொருத்தி பார்த்தவர் கைது!!

23 Nov, 2023
வீடுகளுக்குள் நுழைந்து குளியலறைக்குள் கெமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞன் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!