news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீதியில் சென்ற வாக­னங்­க­ளுக்கு சில யார்கள் உய­ரத்தில் விமானம் பறந்து சென்­றதால் பர­ப­ரப்பு-விடியோ

10 Oct, 2015

கொஸ்தாரிக்­காவில் பய­ணிகள் விமா­ன­மொன்று வீதி­யொன்றில் சென்ற வாக­னங்­க­ளுக்கு சில யார் கள் உய­ரத்தில் பறந்து சென்­றதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஸ்பெயினின் மட்றித் நக­ரி­லி­ருந்து கொஸ்தா ரிக்­கா­வி­லுள்ள சான் ஜோஸ் நக­ருக்கு பய­ணித்த எயார்பஸ் 340 விமா­னமே இவ்­வாறு பறந்­துள்­ளது.

இந்த விமானம் சான் ஜோஸ் நக­ரி­லுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலை­யத்தில் தரை­யி­றங்கத் தயா­ரான நிலையில் கடும் காற்று கார­ண­மாக அந்த விமா­னத்தின் இயக்­கத்தில் மாற்றம் ஏற்­பட்­டமை கார­ண­மா­கவே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் காரில் இருந்து குதித்த இளம் பெண்( வீடியோ இணைப்பு)

girl_excape_002 பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவர் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் காரில் இருந்து குதிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள பொலிசார் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரித்தானியாவின் கொனெக்டிகட்டில் உள்ள பிரிஜ்போர்ட் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் சாலையில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது காரில் வந்த பெண்மணி ஒருவர் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றி சென்றுள்ளார்.

girl_excape_003சில நிமிடங்கள் கழித்தே தாம் கடத்தப்பட்டதை உணர்ந்த இளம் பெண், காரில் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்று முடிவு செய்தார்.

இதையடுத்து தப்பிப்பதற்காக திடீரென சாலையில் குதித்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சில வினாடிகள் வேகத்தை குறைத்த காரின் ஓட்டுனர் பின்னர் வேகமாக சென்றுவிட்டார்.

இதையடுத்து காரில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண் இது குறித்து பொலிசில் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அங்கிருந்த கமெராவில் பதிவாகியிருந்த காட்சியை வைத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது சாம்பல் நிற டொயொடா கார் என்பதை கண்டுப்பிடித்தனர்.

மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்மணியை தேடிவருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!