news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீதி விபத்தில் இரு சிறுமிகள் மரணம்: படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதி..!

05 Dec, 2020
நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி தாயொருவரும் காயமடைந்துள்ளார். மொரட்டுவை -எகொட உயன- புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்திலேயே இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி பெண்ணொருவர் பலத்த காயமடைந்த நிலையில் பாணந்துறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து, பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த உந்துருளியொன்று மோதியதாலேயே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 7 வயது சிறுமியும் 1 வயதுடைய குழந்தையொன்றுமே  பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மேலதிக சிகிச்சைக்காக, பாணந்துறை  வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!