சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகளும் 8 முன்னெச்சரிக்கைகளும்
09 Nov, 2026
மரு.அ.வேணி
உணவு நஞ்சாதல் (Food Poisoning): வெப்பக் காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன.
ஆகவே சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை உண்பதற்கு முன்பு வீணாகிவிட்டதா? என்பதைப் பரிசோதித்து, பின் எடுத்துக்கொள்வது நல்லது.
சால்மோனெல்லா, கேம்பைலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் வெயில் காலங்களில் அதிகமாகப் பரவும் தன்மையுடையவை.
சில பாக்டீரியாக்கள் பால், பால் சார்ந்த பொருட்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் அதிகமாகப் பல்கிப் பெருகக்கூடியன.
இதுமட்டுமல்லாமல் மேலும் சில பாக்டீரியாக்கள் சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளைக் கெட்டுவிடச் செய்கிறது.
தொடக்க நிலையில் சிலருக்கு உணவின் சுவை மாறியுள்ளதைக் கண்டறிய முடிவதில்லை. இப்படிக் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் உணவு நஞ்சாதல் என்கிறோம்.
சமைத்த உணவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவதும் உணவு நஞ்சாவதற்கு மற்றுமொரு காரணம் ஆகும்.
உணவை ஆக்கும் ஒருவரின் கைகள் தூய்மை கெட்டு இருந்தாலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவருக்குள்ள நோயும் உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
உணவு நஞ்சாதலின் அறிகுறிகள்:
கெட்டுப்போன உணவை எடுத்துக் கொண்ட சில மணிநேரங்களிளேயே இதன் அறிகுறிகள் தொடங்கிவிடும்.
அவையாவன, *உடல் சோர்வு, *வயிற்று வலி, *வாந்தி, *வயிற்றுப்போக்கு, *மயக்கம், *வயிற்றுப் பிடிப்பு, *பசியின்மை
உணவு நஞ்சாவதைத் தடுக்க..
.*சமைத்த 4 மணி நேரத்திற்குள் உணவை உண்டுவிடுவது நல்லது.
*வெளியிடங்களில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
*உணவு ஆக்குவதற்கு மற்றும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாகத் தூய்மை செய்ய வேண்டும்
.*காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திய பின்பு பயன்படுத்த வேண்டும்.
*மலம் கழித்த பின்பு கைகளை நன்கு தூய்மை செய்ய வேண்டும்.
வெயில் காலங்களில் பரவும் தொற்று நோய்கள்:
அம்மை நோய், தட்டம்மை, சின்னம்மை, விளையாட்டம்மை, காய்ச்சல் (Flu), இருமல், சளிபோன்ற தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவற்களுக்குப் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,
*அதிகம் வெயிலில் செல்வதைத் தவிர்த்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
*கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
*பெரும்பாலான தொற்றுகள் காற்றின் மூலம் பரவுவதால் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
*எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
*வெயில் நேரங்களில் அதிகம் கிடைக்கும் தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!