இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
சம்பவம் இடம்பெற்ற மெம்பிஸ் நகரத்தில்பதற்றம் நிலவுகின்றத பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர்.
உள்ளுர் பூங்காவில் சூரியஅஸ்தமனத்தை படம் எடுத்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிக்கொலசை கறுப்பினத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார் தடுத்துநிறுத்தினர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை கண்மூடித்தனமாக செலுத்திய குற்றச்சாட்டிலேயே பொலிஸார் அவரை தடுத்துநிறுத்தியுள்ளனர்.
அவரை தடுத்து நிறுத்தி உதைத்துள்ளனர் என கொல்லப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஐந்து பொலிஸாருக்கும் எதிராக கொலை குற்ச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த வீடியோவை அதிகாரிகள் வெளியிடவுள்ள நிலையில் ஜனாதிபதி பைடன் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான வேண்டுகோளில் நானும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தவருடன்இணைந்து கொள்கின்றேன் சீற்றத்தை புரிந்துகொள்ள முடிகின்றது ஆனால் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!